பேரையூர் முருகன் கோயிலில் கொடி மரம் புனரமைக்கப்படுமா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூலை 2019 02:07
பேரையூர்: பேரையூர் முருகன் கோயிலில் சாய்ந்த கொடிமரத்தை புனரமைக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இக்கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வெளியூர்களிலிருந்து வந்து செல்கின்றனர். கோயிலுள்ள கொடிமரம் கடந்தாண்டு செப்., மாதம் சாய்ந்தது. இதை சரி செய்ய இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.
சாய்ந்துள்ள கொடி மரம் முட்டு கொடுக்கபட்டுள்ளது. கொடி மரம் சாய்ந்திருப்பது பக்தர்களுக்கு வேதனை அளிக்கிறது. எனவே கொடிமரத்தை மீண்டும் நட்டு, கோயில் புனிதத்தை காக்க வேண்டும் என பக்தர்கள் தெரிவித்தனர்.