ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே இருதயபுரம் திரு இருதய ஆண்டவர் சர்ச் பெருவிழா ஜூன் 21ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
பாதிரியார் அம்புரோஸ் விழா கொடியேற்றி விழாவினை துவங்கி வைத்து, திருப்பலி நிறை வேற்றினார். விழாவின் தொடர்ச்சியாக தினமும் நவநாள் திருப்பலியும், நற்கருணை ஆராதனை யும் நடைபெற்றன. முக்கிய விழாவான தேர்பவனி விழா நேற்று முன்தினம் (ஜூன்., 29ல்) இரவில் நடைபெற்றது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் திரு இருதய ஆண்டவர் தேவ மாதா ஆகியோர் தனித்தனி தேர்களில் வீதி உலா நடந்தது. விழா ஏற்பாடுகளை இருதயபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தினர் செய்திருந்தனர்.