பதிவு செய்த நாள்
01
ஜூலை
2019
04:07
கோவை:ராம்நகர் ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கத்தில், சமஷ்டி உபநயனம் நிகழ்ச்சி நேற்று 30 ல், நடந்தது. கோவை, ராம் நகர் ஐயப்பன் பூஜா சங்கம் சார்பில், ஆண்டுதோறும் குழந்தைகளுக்கு சமஷ்டி உபநயனம்(பூணூல் அணிவித்தல்) இலவசமாக நடத்தப்படுகிறது. ஐயப்பன் பூஜா சங்கத்தில் நேற்று 30 ல், நடந்த நிகழ்ச்சியானது, சங்கத் தலைவர் ஜெகன், செயலாளர் ஆனந்த் ஆகியோர் தலைமையில், பரம்ஸரீ சுந்தர் வாத்தியார் நடத்தி வைத்தார்.காலை, 6:00 மணி
முதல் கணபதி ஹோமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை அடுத்து, காலை, 7:15 முதல் மதியம், 12:00 மணி வரை, 28 ஆண் குழந்தைகளுக்கு சமஷ்டி உபநயனம் செய்யப்பட்டது. சங்க நிர்வாகிகள், குழந்தைகளின் பெற்றோர் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.