பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை வாசவி மகாலில் தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில், உலக நன்மை பெற வேண்டியும், மழைபெற வேண்டி சிறப்பு திருகல்யாண உற்சவம் நேற்று நடந்தது.
விழாவையொட்டி நேற்று முன்தினம் காலை 7:30 மணிக்கு மங்கள இசை, 8:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, காலை 9:30 மணி முதல் மாலை 6:00 மணிவரை அஷ்டபதி பஜனை, மாலை 6:30 மணிக்கு விஷ்ணுசகஸ்ரநாம பாராயணம், இரவு 7:30 மணி முதல் 10:00 மணி வரை திவ்யநாம பஜனை நடந்தது. நேற்று காலை 7:30 மணிக்கு உஞ்சவ்ருத்தி பஜனை, காலை 8:30 மணிக்கு மேல் 12 :00 மணி உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவி சகிதமாக சிறப்பு அலங்காரத்தில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மதுராபுரி முரளிதர ஸ்வாமிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இதில் பிராமணர் சங்க மாநில தலைவர் திருவெற்றியூர் நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை தமிழ்நாடு பிராமணர் சங்க பண்ருட்டி கிளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.