பதிவு செய்த நாள்
03
ஜூலை
2019
11:07
திருவள்ளூர்: ஆனி அமாவாசையை முன்னிட்டு, வீரராகவர், முதல் நாள் தெப்ப உற்சவத்தில், மூன்று முறை உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவள்ளூர், வீரராகவர் கோவிலில், ஆனி அமாவாசையை முன்னிட்டு, மூன்று நாட்களுக்கு, தெப்ப உற்சவ விழா நடைபெறும். இந்த ஆண்டிற்கான, தெப்ப உற்சவம், நேற்று மாலை, ஹிருதபநாசினி குளத்தில் நடந்தது.இதற்காக, உற்சவர் வீரராகவ பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவியுடன், நீராழி மண்டபத்திற்கு எழுந்தருளி னார். பின், இரவு, 7:00 மணியளவில், தெப்பத்தில் எழுந்தருளி, மூன்று முறை வலம் வந்தார். இன்றும், நாளையும் தெப்ப உற்சவம் நடைபெறும். திரளான பக்தர்கள் தெப்ப உற்சவத்தில் பங்கேற்றனர்.மேலும், அமாவாசை முன்னிட்டு, முத்துகளால் அலங்கரிக்கப்பட்ட வெல்வெட்டு அணிந்து, மூலவர், உற்சவர் மற்றும் தாயார் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.