பதிவு செய்த நாள்
03
ஜூலை
2019
02:07
திருத்தணி: திருத்தணி, தணிகாசலம்மன், படவேட்டம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன், விஷ்ணு துர்க்கையம்மன் உள்ளிட்ட அம்மன் கோவில்களில், நேற்று 2லில்,, ஆனி மாத அமாவாசை யையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தன.
தணிகாசலம்மன் கோவிலில், காலை, 8:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு சிறப்பு பாலாபி ஷேகம், மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடந்தன.அதை தொடர்ந்து, காலை, 10:30 மணிக்கு, திரளான பெண்கள், கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.மாலை, 6:00 மணிக்கு, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில், வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதே போல், திருத்தணி அடுத்த, தலையாறிதாங்கல் பகுதியில் உள்ள, ஷீரடி சாய்பாபா கோவி லில், மூலவருக்கு பாலாபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடந்தன. மதியம், 12:00 மணிக்கு, சிறப்பு ஆரத்தியும்; மாலையில், ஆன்மிக சொற்பொழிவும் நடந்தன.