சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே முறையூரில் வடபத்திர காளி அம்மன், வடக்கு வாசல் செல்வி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு விளக்கு பூஜை நடந்தது.
ஜூன் 23ம் தேதி பால் குடம் மற்றும் பூத்தட்டு அம்மனுக்கு எடுக்கப்பட்டு அபிஷேகம் நடை பெற்றது. ஜூன் 24ம் தேதி காப்பு கட்டப்பட்டது.நேற்று முன்தினம் (ஜூலை., 1ல்) 9ம் திருவிழாவை முன்னிட்டு இரவு 8:00 மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்கி விளக்கு பூஜை நடைபெற்றது. நேற்று (ஜூலை., 2ல்) கோவில் முன் காலை முதல் ஏராளமான பெண் பொங்கலிட்டனர்.