பதிவு செய்த நாள்
04
ஜூலை
2019 
01:07
 
 காஞ்சிபுரம்:பயணியர் வருகையை பொறுத்து, காஞ்சிபுரம், நத்தப்பேட்டை ரயில் நிலையங் களில், கூடுதல் டிக்கெட் கவுன்டர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, தெற்கு ரயில்வே மண்டல மேலாளர் மகேஷ் தெரிவித்தார்.
காஞ்சிபுரம், நத்தப்பேட்டை ரயில் நிலையங்களில், தெற்கு ரயில்வே மண்டல மேலாளர் மகேஷ், நேற்று ஆய்வு செய்தார். ரயில் நிலையங்களில் பராமரிப்பு மற்றும் தேவைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.மேலும், அத்தி வரதர் வைபவத்திற்காக, ஏற்கனவே கூடுதலாக மூன்று மின்சார ரயில்கள் விடப்பட்டன. மேலும், இரு மின்சார ரயில் விடப்படுகிறது என்றார்.
ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுன்டர், நடைமேடை, கழிப்பறை வசதிகள் என்ன நிலையில் உள்ளது என்பதை பார்வையிட்டார்.புதிய ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளி கள் கழிப்பறை மூடப்பட்டிருந்தது. டிக்கெட் கவுன்டர் கழிப்பறையில், தண்ணீர் வரவில்லை என்பதை, நேரடியாக பார்த்து, அதிகாரிகள் கவனிக்க வேண்டும் என, உத்தரவிட்டார்.
சென்னை மக்கள், அத்தி வரதர் தரிசன வசதிக்காக, அதிகாலை, மின்சார ரயில் சேவை இயக்கப்படுமா என்ற கேள்விக்கு, பரிசீலிக்கப்படும் என்றார்.இது குறித்து, தெற்கு ரயில்வே மண்டல மேலாளர் மகேஷ் கூறியதாவது:காஞ்சி அத்தி வரதர் வைபவத்தை முன்னிட்டு, ரயில் நிலையங்களில்என்னென்ன வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்ய வந்தேன்.
பயணியர் வருகையை பொறுத்து, காஞ்சிபுரம் இரு ரயில் நிலையங்கள் மற்றும் நத்தப் பேட்டை ரயில் நிலையத்தில், கூடுதல் டிக்கெட் கவுன்டர் வசதி ஏற்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.