உடுமலை வேங்கடேச பெருமாள் கோவிலில் நிகழ்ந்த அதிசய நிகழ்வுகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூலை 2019 01:07
உடுமலை:உடுமலை ஏழு குளங்களில் ஒன்றான செங்குளத்தின் கரையில்ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது.
ஆந்திரா மாநில மலைப்பகுதியில் இருந்து வெட்டி எடுத்து வரப்பட்ட பச்சை நிற கிரானைட் கற்களால் வடிவமைக்கப்பட்டது. நம்பெருமாள் வைகுண்ட வாசலில் எழுந்தருள வடக்கு வாசல் கோபுரத்துடன் பரமபத வாசல், நிலைக்கதவில் எம்பெருமாள் அவதாரங்கள் இடம்பெற்றுள்ளன.
கொடிமரம் மற்றும் பலிபீடம் முழுவதும் செம்பு தகடுகளால் வேயப்பட்டு ள்ளன.ராமானுஜர், நம்மாழ்வார் உட்பட ஆழ்வார்களுக்கு தனி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவில் அடிக்கல்நாட்டு விழாவின் போது அதிசய நிகழ்வாக 60க்கும் மேற்பட்ட கருடாழ்வார் ரூபமான பருந்துகள் மேலே வட்டமிட்டன.சிலைகள் ஊர்வலமான கரிக்கோலம் நிகழ்ச்சியின் போதும் பருந்துகள் உடன் வந்தன என பக்தர்கள் தெரிவித்தனர்.