பதிவு செய்த நாள்
05
ஜூலை
2019
02:07
திருத்தணி:திருத்தணி அடுத்த, நெமிலி கிராமத்தில், பழைமை வாய்ந்த தேவி, பூதேவி வைகுண்ட பெருமாள் கோவிலின் திருப்பணிகள் முடிந்து, 2ம் தேதி கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது.
கோவில் வளாகத்தில், 7 யாக சாலைகள், 250 கலசங்கள் அமைத்து, முதல் கால யாக பூஜை நடந்தது. நேற்று 4ம் தேதி, காலை, 6:00 மணிக்கு, விஸ்வரூபம், மஹா பூர்ணாஹூதி நடந்தது. அதை தொடர்ந்து, கும்பம், கலசம் புறப்பட்டு, காலை, 8:45 மணிக்கு, புதியதாக அமைத்த கோவில் விமானத்தின் மீது கலசநீர் ஊற்றி, மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.காலை, 11:00 மணிக்கு, மூலவருக்கு மஹா அபிஷேகம், மாலை, 4:00 மணிக்கு, திருக்கல்யாண உற்சவம், இரவு, 7:00 மணிக்கு, உற்சவர் வீதியுலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.