பதிவு செய்த நாள்
05
ஜூலை
2019
02:07
செங்கல்பட்டு:புதுப்பாக்கம் கிராமத்தில், கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில், மஹா கும்பாபிஷேக விழா, நேற்று (ஜூலை., 4ல்) நடைபெற்றது.
செங்கல்பட்டு அடுத்த, புதுப்பாக்கம் கிராமத்தில், பூமி நீளா சமேத கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், 60 ஆண்டுகளுக்கு மேல், பூஜைகள் செய்யப் படாமல், சீரழிந்து இருந்தது.அதன்பின், கிராம மக்கள், ஆன்மிக பக்தர்கள் ஆகியோர், 35 லட்சம் ரூபாய் மதிப்பில், திருப்பணிகளை, கடந்த ஆண்டு துவங்கி, நடைபெற்று வந்தது.
சில நாட்களுக்கு முன், அனைத்து திருப்பணிகளும்நிறைவடைந்தன.இதையடுத்து, 2ம் தேதி, விநாயகர் பூஜையுடன், கும்பாபிஷேக விழா துவங்கியது. அதன்பின், நேற்று (ஜூலை., 4ல்) காலை, 5:00 மணிக்கு, கோ பூஜையுடன், விழா துவங்கி, சிறப்பு யாகமும், கலசங்கள் புறப்பட்டு, கோபுர கலசங்களுக்கு, புனித நீர் ஊற்றி, மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.காலை, 11:30 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், பகல், 1:00 மணிக்கு, கல்யாண வரதராஜ பெருமாள், பூமி நீளாதேவி, ஸ்ரீதேவி ஆகியோருக்கு, திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது.