வடமதுரை அருகே ஸ்ரீ சீனிவாச பெருமாள், திருமாலம்மாள் கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூலை 2019 03:07
வடமதுரை:காணப்பாடி ஊராட்சி குப்பமுத்துப்பட்டியில் ஸ்ரீ சீனிவாச பெருமாள், திருமாலம்மாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
நேற்று முன்தினம் (ஜூலை 3ல்.,) மாலை விநாயகர் கோயில் தீர்த்தம் அழைக்கும் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. யாக பூஜைகளை தொடர்ந்து நேற்று (ஜூலை 3ல்.,) காலை யாக சாலையில் இருந்து கடங்கள் புறப்படாகி விமான கலசங்களுக்கு புனித நீருற்றி கும்பாபிஷே கம் நடந்தது. செந்துறை திருவேங்கடம் அய்யர், காணப்பாடி பெருமாள் கோயில் அர்ச்சகர் சீனிவாசன், பிலாத்து பூபதி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். சுற்றுவட்டார இந்து தெலுங்கு குலாலா பாலம் பள்ளிவார் சமூகத்தினர் திரளாக பங்கேற்றனர்.