காரைக்கால் மாங்கனித்திருவிழா: பாதுகாப்பு குறித்து ஆய்வு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜூலை 2019 01:07
காரைக்கால்: காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழா முன்னிட்டு பக்தர்கள் பாதுகாப்பு குறித்து சீனியர் எஸ்.பி. ராகுல் அல்வால் தலைமையில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள காரைக்கால் அம்மையார் 63 நாயன்மார்களில் மிக சிறப்பாக இடம் பெற்றவர்.அம்மையார் நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் மாங்கனி திருவிழா மிக விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு வரும் 13-ம் தேதி மாப்பிள்ளை அழைப்பு.14ம் தேதி திருக்கல்யாணம். 15ம் தேதி மகாஅபிஷேகம் தீபாராதனை. 16ம் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாங்கனித் திருவிழா மிக விமரிசையாக நடைபெற உள்ளது. மாலை அமுது படையல் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் நலன் கருதி மாவட்ட போலீசார் பாதுகாப்பு குறித்து நேற்று சீனியர் எஸ்.பி. ராகுல் அல்வால் தலைமையில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். எஸ்.பி.க்கள் மாரிமுத்து. வீரவல்லபன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். மேலும் மாங்கனி திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் அம்மையாரை தரிசனம் செய்வதற்கு எவ்வித சிரமும் இல்லாமல் தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் வரிசை மற்றும் பிரசாதம் வாங்கும் இடம் பக்தர்கள் கோவிலுக்கு உள்ளே இருந்து வெளியே செல்வதற்கு வழிகள் மற்றும் போலீசார் கண்காணிப்பு கேமரா பக்தர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அம்மையாரை தரிசனம் செய்வதற்காக சிறப்பு வழியும் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழா ஏற்பாடு குறித்து அறங்காவலர் குழு தலைவர் கேசவன். துணைத் தலைவர் ஆறுமுகம். செயலாளர் பக்கிரிசாமி. பொருளாளர் ரஞ்சன் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.