பதிவு செய்த நாள்
08
ஜூலை
2019
01:07
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில், ஆனந்த பவனம் மடத்தை, மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர், ரவிசங்கர் பிரசாத் நேற்று (ஜூலை., 7ல்) திறந்து வைத்தார்.
காஞ்சிபுரம், வரதராஜப் பெருமாள் கோவில் சன்னதி தெருவில், புதியதாக ஆனந்த பவனம் வேங்கடேச தேவஸ்தான் பஜனை மடம் கட்டப்பட்டுள்ளது.அதை, மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர், ரவிசங்கர் பிரசாத் நேற்று (ஜூலை., 7ல்) காலை திறந்து வைத்தார்.மடத்தின் முக்கிய நிர்வாகிகள் அமைச்சரை வரவேற்றனர்.
உடன், தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை பங்கேற்றார்.இந்நிகழ்ச்சியை தொடர்ந்து, வரதராஜப் பெருமாள் கோவிலில், அத்தி வரதரை அமைச்சர், தரிசனம் செய்து விட்டு, புறப்பட்டு சென்றார்.