பதிவு செய்த நாள்
08
ஜூலை
2019
02:07
குளித்தலை: மேலமருதூர் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் பால் குடம், தீர்த்தகுடம் எடுத்து வந்தனர். குளித்தலை அடுத்த, மேலமருதூர் மாரியம்மன்கோவில் திருவிழா, கடந்த வாரம் பூச்சாட்டுதலுடன் துவங்கியது.
விழாவை முன்னிட்டு, மருதூர் காவிரி ஆற்றில் இருந்து, பக்தர்கள் பால் குடம், தீர்த்த குடம் எடுத்துக் கொண்டு, செல்லாண்டியம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு அபிஷேக ஆராதனை செய்து அம்மனை வழிபட்டனர். பின் அங்கிருந்து ஊர்வலமாக மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்து சுவாமியை வழிபட்டனர். இதில், 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இரவு, வடிகால் வாய்க்கால் வாரிக்கரை பாலத்தில் கரகம் பாலித்து, சுவாமி திருவீதி உலா வந்தது. அலகு குத்துதல், அக்னிச் சட்டி எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சி இன்று (ஜூலை., 8ல்) நடக்கிறது. நாளை (ஜூலை., 9ல்)பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல் போன்றவை நடக்கஉள்ளன.