ஜம்மு: ஹிஸ்புஸ் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதியாக இருந்த, பர்ஹான் வானியை, பாதுகாப்புப் படையினர் மூன்றாண்டுகளுக்கு முன், சுட்டுக் கொன்றனர். அவருடைய நினைவு தினத்தையொட்டி, பிரிவினைவாத அமைப்பு கள், முழு அடைப்புக்கு நேற்று அழைப்பு விடுத்திருந்தன. அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அமர்நாத் புனித யாத்திரை, நேற்று நிறுத்தி வைக்கப்பட்டது.