ராமேஸ்வரம்: ராமாயண வரலாற்றில் ராவணன் சிறை பிடித்த சீதையை மீட்க தனுஷ்கோடியில் இருந்து இலங்கை தலைமன்னார் இடையே கடலில் ராமர், அனுமான், வானர சேனைகள் பாலம் அமைத்தனர்.
இப்பணியை ராமேஸ்வரத்தில் உயரமான மணல் திட்டில் ராமர் நின்றபடி ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. இந்த வரலாறு சம்பவத்தை நினைவு கூறும் விதமாக உயர மான (கெந்தமாதன பர்வதம்) அந்த இடத்தில் ராமர் பாதம் கோயில் அமைக்கப்பட்டது. இங்கு தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் தரிசனம் செய்கின்றனர்.மேலும் இக்கோயில் மேல்தளத்தில் நின்றபடி ராமேஸ்வரம் தீவு முழு தோற்றத்தையும் கண்டு ரசிக்கலாம். ஆனால் கோயில் பராமரிப்பின்றி உள்ளது. வர்ணம் பூசாமல் சுவர், மேற்கூரை தளம் கருமையான நிறத்தில் உள்ளது. கோயில் கோபுரம், வெளிபுற தோற்றமும் பொலிவின்றி காணப்படுவதால் பக்தர்கள் வேதனை அடைகின்றனர்.எனவே ராமாயண வரலாற்றில் தொடர்புடைய இக்கோயிலில் பராமரிப்பு பணிகளை செய்து புதுப்பிக்க இந்துஅறநிலைதுறை ஆணையர் உத்தரவிட வேண்டும்.