பதிவு செய்த நாள்
09
ஜூலை
2019
02:07
இடைப்பாடி: கொங்கணாபுரம் அருகே, சின்னப்பம் பட்டி வரதராஜ பெருமாள், வள்ளாலீஸ் வரர், மாரியம்மன் கோவில்கள் கும்பாபிஷேக விழா நேற்று (ஜூலை., 8ல்)கோலாகலமாக நடந்தது. கொங்கணாபுரம் அருகே, சின்னப்பம்பட்டியில் உள்ள வள்ளாலீஸ்வரர், வரதராஜ பெருமாள், மாரியம்மன் கோவில்கள் புதியதாக கட்டப்பட்டுள்ளன.
இதன் கும்பாபிஷேக விழா கடந்த, 5ல் யாகபூஜையுடன் தொடங்கப்பட்டது. 6ல், தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. நேற்று (ஜூலை., 8ல்) மூன்று கோவில்களிலும் கும்பாபிஷேக விழா நடந்தது. கோபுர கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு, அவை பக்தர்கள் மீதும் தெளிக்கப் பட்டது. திருப்பணி கமிட்டியார், ஊர் கவுண்டர்கள், கொங்கணாபுரம் ஒன்றியக்குழு முன்னாள் பெருந் தலைவர் கரட்டூர் மணி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் உள்பட, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
* சேலம், அம்மாபேட்டை, அரசமரத்து பொன்கன்னி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று (ஜூலை., 8ல்) நடந்தது. கடந்த, 7ல், காலை விக்னேஸ்வர பூஜை நடந்தது. மாலை யில் முதற்கால யாக பூஜை நடந்தது. நேற்று காலை, 10:30 மணிக்கு கோபுர கலசங்கள் மீது, புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.