பதிவு செய்த நாள்
10
ஜூலை
2019
02:07
பெ.நா.பாளையம்:பன்னீர்மடையில் உள்ள சீனிவாச பெருமாள், ரங்கநாயகி அம்மன் திருக் கோவில் கும்பாபிஷேகம் இம்மாதம்,6ம் தேதி வாஸ்து பூஜையுடன் துவங்கியது.தொடர்ந்து, 7ம் தேதி பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சனம், யாகசாலையில் பெருமாள் எழுந்தருளல், திருவாராதனம் சாற்றுமுறை, விமான கலசம் ஸ்தாபனம், மூலவர் பிரதிஷ்டை செய்தல், வேதபாராயணம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. மறுநாள் காலை, 9.00 மணிக்கு மகா கும்பாபிஷே கம் நடந்தது. விழாவையொட்டி சிறப்பு அலங்காரம், அன்னதானம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்