பதிவு செய்த நாள்
10
ஜூலை
2019
02:07
மேட்டுப்பாளையம்:சிறுமுகை, முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நாளை (ஜூலை., 11ல்) நடக்கிறது. சிறுமுகை பெரியூரில் பழமையான முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருப்பணி நிறைவடைந்ததை அடுத்து, இக் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் (ஜூலை., 8ல்) மகா கணபதி ஹோமம் கோபூஜை யுடன் துவங்கியது.
காப்பு கட்டுதல், முதல் கால பூஜை, அதைத் தொடர்ந்து இன்று (ஜூலை., 10ல்) காலை இரண்டாம் கால யாக பூஜை, விமான கலசம் வைத்தல், மூன்றாம் கால பூஜை, இரவு சுவாமி சிலை பிரதிஷ்டை ஆகியவை நடக்கின்றன.நாளை (ஜூலை., 11ல்) காலை 9:00 மணிக்கு கோபுர கலசங்களில் சிவாச்சாரியர்கள் புனித தீர்த்தம் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
பின்பு மகா அபிஷேகமும், அலங்கார பூஜையும் அதை தொடர்ந்து அன்னதானம் வழங்குதல் நடக்கிறது.கும்பாபிஷேக நிகழ்ச்சியை கத்தாங்காணி ஆதீனம் சுப்ரமணிய வேதாந்த பண்டித சுவாமி, அவிநாசி ஆதீனம் திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலயம் காமாட்சி தாச ஏகாம்பரநாத சுவாமி, ஓதிமலை ஆண்டவர் உபாசகர் சண்முக சுப்ரமணிய சிவாச்சாரியார் கும்பாபிஷேக த்தை நடத்துகின்றனர்.