மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் அன்னபூரணிபேட்டையில் உள்ள சத்ய சாயி சமூக மையத்திலுள்ள சர்வ மங்கள சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.கணபதி ஹோமத்துடன் துவங்கிய கும்பாபிஷேக விழாவில் முதற்கால யாக பூஜைகள் நடந்தன.
இரவு யந்திர ஸ்தாபனம் செய்து அஷ்டபந்தன மருந்து சாத்தி நாடி சந்தனம் செய்து சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இரண்டாம் கால யாக பூஜையை அடுத்து, கோபுரக் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.சத்ய சாயி சேவா சமிதி கன்வீனர் ராதாகிருஷ்ணன், மாவட்ட தலைவர் சிவசுப்ர மணியன், நிர்வாகிகள் கோபால், குருகிருஷ்ணன், கந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.