மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.,23ல் காலை 9.10 மணிக்கு நடக்கிறது.ஏப்.,30ல் இரவு 7.30 மணிக்கு மீனாட்சி பட்டாபிஷேகம், மே 1ல் அம்மன் திக்குவிஜயம் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மே 2ல் காலை 9.15 மணிக்கு நடக்கிறது. மே 3ல் தேரோட்டம் நடக்கிறது.