Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பூர் செல்வ விநாயகர், ... அன்னுார் செல்வநாயகியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: பலஆயிரம் பக்தர்கள் தரிசனம் அன்னுார் செல்வநாயகியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
துடியலுார் அருகே விருந்தீசா.. விருந்தீசா.. கோஷம் முழக்கம்
எழுத்தின் அளவு:
துடியலுார் அருகே விருந்தீசா.. விருந்தீசா.. கோஷம் முழக்கம்

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2019
12:07

பெ.நா.பாளையம்: துடியலுார் வடமதுரை விஸ்வநாயகி உடனமர் அருள்மிகு விருந்தீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று (ஜூலை., 11ல்) நடந்தது.

சுந்தரமூர்த்தி நாயனார் மிகுந்த பசியுடன் இக்கோவிலை அடைந்தபோது, சிவபெருமாள் அன்னத்தையும், முருங்கை பயிரையும் சேர்த்து சமைத்து பசியாற்றி, இக்கோவிலில் அருட் காட்சி தந்ததாக வரலாறு கூறுகிறது.

சிதிலமடைந்திருந்த இத்திருக்கோவில் புனரமைக்கப்பட்டு, கன்னிமூல கணபதி, விருந்தீஸ் வரர், விஸ்வநாயகி அம்பாள், சுப்ரமணியர், லட்சுமி நாராயண பெருமாள் ஆகிய தெய்வங்க ளுக்கு கோபுரங்களும், துர்க்கை, சண்டிகேஸ்வரர், சூரியன், சந்திரன், நவநாயகர்கள், சனீஸ் வரன், ஆஞ்சநேயர், அதிகார நந்தி, உற்சவ மூர்த்திகள், காலபைரவர் ஆகியவற்றுக்கு பரிவார சன்னிதிகளும், கோபுரங்களும் எழுப்பப்பட்டன.கடந்த, 7 ம் தேதி கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து ஆறு கால பூஜைகள் நடந்தன. கும்பாபிஷேகத்தையொட்டி, நேற்று (ஜூலை., 11ல்) காலை, 5.00 மணிக்கு அனைத்து பரிவார மூர்த்திகளுக்கான கலசங்கள் புறப் பாடு, விநாயகர் முதல் பைரவர் வரை அனைத்து பரிவார சன்னிதிகளில் உள்ள விமானங் களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது.

காலை, 7.30 மணிக்கு யாகசாலையிலிருந்து கலசம் புறப்பட்டு, ஆலயம் வலம் வந்தன. காலை, 9.00 மணிக்கு மேல் கணபதி, விருந்தீஸ்வரர், விஸ்வநாயகி அம்பாள், சுப்பிரமணியர் லட்சுமி நாராயண பெருமாள் ஆகிய தெய்வங்களுக்கு, புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நிறைவேற்றப்பட்டது.தொடர்ந்து மகாதீபாரா தனையும் அன்னதானமும் நடந்தது.

வடமதுரை சுற்றுவட்டார கிராமங்களிலுள்ள ஏராளமான பக்தர்கள் விருந்தீசா.. விருந்தீசா.. கோஷம் எழுப்பி சுவாமியை வழிபட்டனர்.காவலர்களால் பக்தர்கள் திணறல்பாதுகாப்பு காரணங்களுக்காக, கோவில் நுழைவு வாயிலில் ஊர்காவல் படையை சேர்ந்த காவலர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். காலை, 9.00 மணிக்கு யாகசாலையிலிருந்து புறப்பட்ட திருக்குடங்கள் கோவில் முன்பு உள்ள நுழைவாயிலை அடைந்தது.

திருக்குடங்களை சுமந்து வந்த சிவாச்சாரியர்களை உள்ளே செல்ல அனுமதிக்க வில்லை. புனித தீர்த்த குடங்களை கைகளில் ஏந்தி வந்த சிவாச்சாரியர்களும், ஆதீனங்களும் ’நாங்கள் கைகளில் ஏந்தியிருக்கும் புனித கலசங்களில் இருக்கும் தீர்த்தத்தை கோபுர கலசங்கள் மீது ஊற்றினால்தான் கும்பாபிஷேகம் நிறைவை எட்டும். நேரம் தவறி கும்பாபிஷேகத்தை நிறைவு செய்வது சரியானதாக இருக்காது என்று கூறியும், ஊர்காவல் படையினர் அனுமதிக்கவில்லை.

அதிருப்தியில் ஆதீனங்கள் விழாவில் பங்கேற்ற பிள்ளையார் பீடம் பொன் மணிவாசக அடிகளார் உள்ளிட்ட ஆதீனங்கள் மற்றும் சிவாச்சாரியர்கள் கூறுகையில்,” ஊர்காவல்படை யை சேர்ந்தவரிடம் பலமுறை எடுத்துக்கூறியும், அனுமதிக்கவில்லை. தகவல் தெரிந்து சம்பவ இடத்துக்கு வந்த உயர் போலீஸ் அதிகாரி தலையிட்ட பின்பே வெறுப்புடன் கோவில் கதவு திறக்கப்பட்டது.

கடைசி நேரத்தில் அவசர, அவசரமாக கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் மனதில் தீராத ரணத்தை ஏற்படுத்தி விட்டது. அறநிலையம் மற்றும் போலீஸ் அதிகாரிகள் முன்னதாகவே ஊர்காவல்படையினருக்கு அறிவுரை வழங்கியிருந்தால் இது போன்ற சம்பவங்களை தடுத்திருக்கலாம்,” என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலை கிரௌஞ்சமலை கனக்சௌரி கார்த்திக் சுவாமி கோயிலில் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; வைகாசி உற்சவ விழா யொட்டி ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி, அம்மன் தீர்த்த குளத்தை சுற்றி வலம் ... மேலும்
 
temple news
திருப்பூர்: திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி, வீரராகவ பெருமாள் கோவில் வைகாசி விசாக தேர்த்திருவிழா, 13 ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவில், வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவில் நேற்று பஞ்சமூர்த்திகள் புறப்பாடு ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் வைகாசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar