பதிவு செய்த நாள்
12
ஜூலை
2019
12:07
திருப்பூர்:கஞ்சம்பாளையம் செல்வ விநாயகர், மாரியம்மன் கோவில்கள் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.திருப்பூர் அருகேயுள்ள கஞ்சம்பாளையம் செல்வ விநாயகர் மற்றும் மகா மாரியம்மன் கோவில்களில் திருப்பணி நிறைவடைந்து
கும்பாபிஷேக விழா கடந்த 9ம் தேதி துவங்கியது.
தொடர்ந்து கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி மற்றும் யாக சாலை பூஜைகள் நடந்தன.கடந்த 10ம் தேதி, யாகசாலை பூஜையும், யந்த்திர ஸ்தாபனம் மற்றும் பூர்ணாகுதி ஆகியன நடந்தன.
நேற்று (ஜூலை., 11ல்) அதிகாலை, யாகசாலை பூஜைகளைத் தொடர்ந்து, தீர்த்தக் கலசங்கள் புறப்பாடு நடந்தது. அதன்பின், கோவில் கும்பாபிஷேகம், ஸ்ரீஸ்கந்த குரு வித்யாலயம் முதல்வர் ராஜா பட்டர் சர்வ சாதகத்தில் நடந்தது.பின், செல்வ விநாயகர், மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வெற்றி வேலன் கலைக்குழுவின் வள்ளி கும்மியாட்டம் மற்றும் கொங்கு பண்பாட்டு மையத்தின் பெருஞ்சலங்கை ஆட்டம் ஆகியன நடந்தன. விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் மற்றும் ஊர்ப் பொதுமக்கள் செய்திருந்தனர்.