அருப்புக்கோட்டை: வாழ்வில் நலம் பெற, நாம் நினைத்த காரியங்கள் நடைபெற, நம் குடும்பங் கள் தழைத்தோங்க கோயில்களுக்கு சென்று இறைவனை மனமுருக பிரார்த்திக்கிறோம். பலவித நேர்த்திகடன்கள் செலுத்துகிறோம். இறைவனும் நம்முடைய கனவுகளை நனவாக்குகிறார்.
சாப விமோசனத்திற்காக மன்னன் கட்டிய அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் ஆனி மாதம் நடக்கும் ஆனி பிரமோற்ஸவ விழாவில் கொடியேற் றத்தை பிரம்மனே வந்து நடத்தி வைப்பதாக ஐதீகம். அதே நேரம் இவ்விழா நடக்கும் 13 நாட்களும் அனைத்து கடவுள்களும், ரிஷிகளும் இங்கு ஒன்றாக இருந்து கொடி இறக்கும் வரையில் இருப்பர் என்பது புராணம்.
இந்நாட்களில் காலை மற்றும் மாலையில் தினமும் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கோயில் பிரகாரத்தை சுற்றி வருவர். 13 நாட்களில் 108, 1008 சுற்றுகள் சுற்றலாம். தாங்கள் நினைத்த காரியமும் சுற்றுகள் முடிவடைந்த உடனே நிறைவேறி விடுவதாக கோயிலுக்கு வரும் பக்தர்கள் கூறுகின்றனர்.