பதிவு செய்த நாள்
13
ஜூலை
2019
01:07
க.க.சாவடி:க.க.சாவடியில் நுாற்றாண்டு பழமையான மாகாளியம்மன் கோவில் உள்ளது. திருமண தடை நீங்க, இங்குள்ள அம்மனை வேண்டினால், பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். அம்மனுக்கு தேர் செய்ய, கோவில் கமிட்டி முடிவு செய்தது. கடந்த இரு மாதங்களாக தேர் அமைக்கும் பணி, மாதம்பட்டி ராஜராஜேஸ்வரி பீட ஆதினம் விஜயராகவ சுவாமிகள் மேற்பார்வையில் நடந்தது.
ஐந்து டன் எடையில், தேக்கு மரத்தால், 14 அடி உயரம், 6 அடி அகலத்தில் தேர் உருவாக்கப் பட்டது; உற்சவர் அம்மன் சிலையும் வடிவமைக்கப்பட்டது. பணிகள் நிறைவு பெற்றதும், தேர் உருவாக்கப்பட்ட சண்முகம் தோட்டத்தில் இருந்து, கோவில் வரை வெள்ளோட்டம் விடப்பட் டது; திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.கோவில் கமிட்டி மோகன்குமார் கூறுகையில், ”திருமலையாம்பாளையம், எட்டிமடை, மாவுத்தம்பதி, மாஸ்திகவுண்டன்பதி, புதுப்பதி, வழுக்கல், நாச்சிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் எந்த கோவிலிலும் அம்மனுக்கு தேர் கிடையாது. இங்கு தேர் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் கடைசி வெள்ளியன்று தேர்த்திருவிழா நடக்கும்,” என்றார்.