பதிவு செய்த நாள்
13
ஜூலை
2019
02:07
திருத்தணி: முருகன் கோவில் ஆடிக்கிருத்திகை விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு, செய்ய வேண்டிய அடிப்படை வசதி குறித்து, கோட்டாட்சியர் தலைமையில், அனைத்துத் துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம், நேற்று (ஜூலை., 12ல்)நடந்தது.
திருத்தணி, முருகன் கோவிலில், வரும், 24 முதல், 28ம் தேதி வரை, ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா நடைபெற உள்ளது.இந்த விழாவிற்கு, தமிழகம் மற்றும் அண்டை மாநிலங் களில் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள், காவடிகளுடன், மலைக்கோவிலுக்கு வருவர்.
இவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் அனைத்து துறையினர் முன்னேற் பாடுகள் குறித்து, திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், கோட்டாட்சியர், பவணந்தி தலைமையில், ஆலோசனைக் கூட்டம், நேற்று (ஜூலை., 12ல்) நடந்தது.
இதில் பங்கேற்ற அதிகாரிகள், தங்கள் துறையின் சார்பில், செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து விளக்கினர்.அதன் பின், கோட்டாட்சியர், பவணந்தி, ’குடிநீர், சுகாதாரம் மற்றும் மருத்துவ சிகிச்சை ஏற்படுத்தி தர வேண்டும். அதே போல் போலீசார் பலத்த பாதுகாப்புடன் செயல்பட்டு, குற்றங்கள் நிகழாமல் கண்காணிக்க வேண்டும்’ என, கூறினார்.திருத்தணி, டி.எஸ்.பி., சேகர், திருத்தணி, அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர், ஹோமவதி உட்பட, அனைத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.