பதிவு செய்த நாள்
13
ஜூலை
2019
02:07
விழுப்புரம்:திருவெண்ணெய்நல்லுார் அடுத்த டி.கொளத்துாரில் உள்ள விநாயகர் கோவில் கும்பாபிேஷக விழா நடந்தது.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த டி.கொளத்துார் கிராமத்தில் பழமைவாய்ந்த சின்னி விநாய கர், பூர்ண புஷ்கலாம்பிகை சமேத ஐயனார் கோவில்கள் அமைந்துள்ளன. இக்கோவிலில், திருப்பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த 8 ம் தேதி மகா கும்பாபிேஷக விழா துவங்கியது. அன்று காலை அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, கணபதிஹோமமும், 9 ம் தேதி நவக்கிரகஹோமம், கோ பூஜை, தன பூஜை, அங்குரார்ப்பணம், கும்ப அலங்காரம், முதல்கால யாக பூஜை, தீபாராதனையும் நடந்தது.
தொடர்ந்து 10ம் தேதி இரண்டாம் கால பூஜைகள், பூர்ணாஹூதி, தீபாராதனை, 3ம் கால யாக பூஜைகள், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.இதையடுத்து, நேற்று முன்தினம் 11ம் தேதி காலை 8:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, நாடி சந்தானம், தத்துவார்ச்சனை யும், 9:30 மணிக்கு கடம் புறப்பாடானது. தொடர்ந்து 10:00 மணிக்கு, கோவில் விமான கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிேஷக விழா நடந்தது.
இதனை சுந்தரராம சாஸ்திரிகள், பாலாஜி சாஸ்திரிகள், ஹரிகரராம சாஸ்திரிகள் நடத்தி வைத்தனர்.இதில், டி.கொளத்துார் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் பிரதோஷ பேரவையினர் செய்திருந்தனர்.