பழநியில் ஆடி லட்சார்ச்சனை விழா: ஜூலை 17ல் துவக்கம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூலை 2019 11:07
பழநி: பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் ஆடி லட்சார்ச்சனை விழா, ஜூலை 17 முதல் ஆக.,16 வரை நடக்கிறது. பழநி கிழக்கு ரதவீதி பெரியநாயகியம்மன் கோயிலில் ஆடி மாதபிறப்பு (ஜூலை 17ல்) அன்று நுாறாயிரம் மலர்கள் துாவி ஆடி லட்சார்ச்சனை நடக்கிறது. ஆக.10ல் லட்சார்ச்சனை பூர்த்தி விழாவும், ஆக.11ல் ஆடி லட்சார்ச்சனை வேள்வி பூஜை நடக்கிறது. ஒவ்வொரு ஆடிவெள்ளியன்று பெரியநாயகியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து மாலையில் முத்தங்கி, சந்தனக்காப்பு, மீனாட்சி உள்ளிட்ட அலங்காரங்கள் செய்கின்றனர்.
வெள்ளித்தேர்: ஆடி கடைசிவெள்ளி ஆக.16ல் இரவு வெள்ளித்தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர்(பொ) செந்தில்குமார் செய்கின்றனர்.