பதிவு செய்த நாள்
15
ஜூலை
2019
02:07
போடி:போடி கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை யொட்டி சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது.
போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே கொண்டரங்கி மல்லையசுவாமி கோயிலில், பிரதோஷ த்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் அருளாசி பெற்றனர். பிரசாதம் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கோயில் தலைவர் திவாகரன், செயலாளர் மனோகரன், பொருளாளர் பாலமுருகன், உபதலைவர் குமரேசன், துணைத்தலைவர் பாஸ்கரன் செய்திருந்தனர்.
* போடி அருகே பிச்சாங்கரை மலைப்பகுதியில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சித்தர்களால் கட்டப்பட்ட ஸ்ரீ கயிலாய கீழச்சொக்கநாதர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேம், தீபாரதனைகள் நடந்தது. சிவனுக்கு சிறப்பு அலங்காரங்களை போடி ஜமீன்பரம்பரையை சேர்ந்த பாண்டி சுந்தரபாண்டியன் செய்திருந்தார்.
* மேலச்சொக்கநாதர் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேம், தீபாரதனைகள் நடந்தன.
* போடி பரமசிவன் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் கோயில் அன்னதான அறக்கட்டளை தலைவர் வடமலை ராஜைய பாண்டியன் தலைமையில் நடந்தது.
* போடி சுப்பிரமணியர் கோயில், வினோபாஜிகாலனி மீனாட்சி சுந்தரரேஸ்வரர் கோயில், விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரா தனைகள் நடந்தது.