தேவதானப்பட்டி தேர் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூலை 2019 02:07
தேவதானப்பட்டி:குள்ளப்புரம் உத்தண்ட சவுந்தரராஜ பெருமாள் கோயில் புதிய தோ் கட்டும் பணி எட்டு ஆண்டுகளாகநிறுத்தப்பட்டுள்ளது. புதிய தேர் கட்டும் பணியை விரைந்து முடிக்க இந்து அறநிலைய துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரியகுளம் ஒன்றியம், குள்ளப்புரத்தில் உத்தண்ட சவுந்தரராஜப் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில்உத்தண்ட சவுந்தரராஜபெருமாள், பூா்ணாம்பாள், புஷ்தாயம்பாள் தெய்வங்கள் உள்ளன. கோயில் ஆண்டுதோறும் வைகாசியில் தேர் திருவிழா 10 நாட்கள் நடக்கும், சுற்றுவட்டார மக்கள் கலந்து தரிசனம் பெறுவது வழக்கம். கோயிலுக்கு 30 ஏக்கர் நிலம் கிராம கட்டுப்பாட்டில் இருந்த வரை குத்தகை வசூல் செய்யப்பட்டு ஆண்டுதோறும் விழா நடத்தப்பட்டது.
அதன் பிறகு குத்தகைக்கு விடப்பட்டு குத்தகைதாரர்கள் குத்தகை பணம் செலுத்துவது இல்லை. இதனால் தற்போது சித்ரா பவுர்ணமி, தை முதல் தேதியில் உற்சவர்ஆற்றுக்கு சென்று மக்களுக்கு அருள் பலித்து வருகிறார்.
புதிய தேர் கட்டும் பணி: இக்கோயிலில் புதிய தோ் கட்டுவதற்கு 2012ல் அரசு அனுமதி வழங் கியது. அரசு சாா்பில் ரூ.14 லட்சம் பொது மக்கள் பங்களிப்பு 6 லட்சத்து 50 ஆயிரம் என மொத்தம் 20 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில், டெண்டா் விடப்பட்டு தே்ா கட்டும் பணி துவங்கியது. 5ஆண்டுகளுக்கு பின் சக்கரம் பொருத்தப்பட்டது. தொடர்ந்து பணி நடைபெற வில்லை. புதிய தேர் வெயில், மழையால் சேதமடைகிறது.தேர் கட்டும் பணி எட்டு ஆண்டு களாக தடைபட்டுள்ளதால் பக்தர்கள் வேதனையில் உள்ளனர். தேர்கட்டும் பணியில் தடை களை அகறிந்து பணிகள் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்.