பதிவு செய்த நாள்
15
ஜூலை
2019
02:07
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையத்தில் புதிதாக திருப்பணிகள் செய்த மைக்கண் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று (ஜூலை., 15ல்) நடக்கிறது.
மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் கரையோரம், பழைய சந்தைக்கடையில் பழமையான மைக்கண் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு விநாயகர், சிவன், நவகிரக சன்னதிகள் உள்ளன. அவை சீரமைத்து திருப்பணி செய்யப்பட்டன.
இக்கோவில் கும்பாபிஷேக விழா, 13ம் தேதி பிள்ளையார் வழிபாடுடன் துவங்கியது. நேற்று (ஜூலை., 14ல்) காலை, சுப்ரமணிய சுவாமி கோவில் அருகே பவானி ஆற்றிலிருந்து தீர்த்தக் குடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.மாலையில் முனீஸ்வரன் கோவிலிருந்து முளைப் பாலிகை மற்றும், சாட்டை ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்பு வேள்விச் சாலையில் முதல் கால வழிபாடும், 108 மூலிகையாஹுதி வழிபாடும் நடந்தது.அதைத் தொடர்ந்து இரவு சுவாமி களுக்கு எண்வகை மருந்து சாற்றி, விமானத்தில் கலசங்கள் நிறுவப்பட்டன. இன்று (15ம் தேதி) காலை, இரண்டாம் கால வேள்வி வழிபாட்டை தொடர்ந்து, 10:30 மணிக்கு மேல் விமானக் கலசம், பரிவார மூர்த்திகள் மற்றும் மூலவருக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக விழா நடந்தது.அதைத் தொடர்ந்து அம்மனுக்கு அலங்கார வழிபாடும், அன்னதானமும் நடை பெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.