பதிவு செய்த நாள்
15
ஜூலை
2019
03:07
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த, லாலாப்பேட்டை கள்ளப்பள்ளி தெற்கு கிராம த்தில், பகவதியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் தீர்த்தகுடம் எடுத்து வந்தனர். முன்னதாக, லாலாப்பேட்டை காவிரி ஆற்றில் கரகம் பாலிக்கப்பட்டது. பின், ஏராளமான பக்தர்கள் காவிரி ஆற்றிலிருந்து, தீர்த்தகுடம் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். திருவிழா இன்று (ஜூலை., 15ல்) நடக்கிறது. இதில், அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல், இரவு 12:00 மணிக்கு சுவாமி காவு குடித்தல், அருள் வாக்கு சொல்லுதல் போன்ற பல நிகழ்ச்கிகள் நடக்கின்றன.