பதிவு செய்த நாள்
15
ஜூலை
2019
03:07
அரூர்: அரூர் அருகே, மழைக்காக பூமியில் புதைந்து, இரண்டு மணி நேரம், சாமியார் ஒருவர், பஞ்ச பூத வர்ண பூஜை நடத்தினார்.
தர்மபுரி மாவட்டம், அரூரை அடுத்த, பொய்யப்பட்டியை சேர்ந்தவர் மணி சாமி, 40; அதே பகுதி யில் பொய்கை சித்தர் பீடம் பெயரில், கோவில் கட்டியுள்ளார். மழை வேண்டி, பூமிக்கடியில் தன்னை புதைத்துக் கொண்டு, இரண்டு மணி நேரம், நேற்று (ஜூலை., 14ல்) பஞ்ச பூத வர்ண பூஜை செய்தார்.
பூஜை முடிந்து வெளியே வந்த அவர் கூறியதாவது: பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், இயற்கை சீற்றம் மற்றும் குடிநீர் பிரச்னை ஏற்பட்டபோது, சித்தர்கள் பஞ்ச பூத வர்ண பூஜை செய்தனர். அதன்படி, பஞ்ச பூத வர்ண பூஜை செய்ய முடிவு செய்தேன். இதற்காக, 10 அடி நீளம், 10 அடி அகலம் மற்றும் 10 அடி ஆழத்தில் குழி தோண்டப்பட்டது. நேற்று காலை, 10:30 மணிக்கு, குழிக்குள் இறங்கினேன்.
குழி மீது, இரும்பு தகரம் மற்றும் பலகை அமைத்து, மண்ணால் மூடப்பட்டது. பகல், 12:30 மணி வரை, அமர்ந்த நிலையில் இருந்தேன். இந்த பூஜை செய்ய, ஓலைச்சுவடிகள் மற்றும் குரு நாதர்கள் மூலம், 13 ஆண்டுகள் பயிற்சி பெற்றேன். இதற்காக கடந்த, 12 நாட்களாக, திரவ உணவுகளை மட்டுமே உட்கொண்டேன். இந்த பூஜை செய்ததால், கண்டிப்பாக மழை பெய்யும். குடிநீர் பிரச்னை தீரும். பயிற்சியின்றி யாராவது இந்த பூஜை செய்தால், உயிருக்கு ஆபத்து ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.