பதிவு செய்த நாள்
24
ஜூலை
2019
02:07
கிருஷ்ணகிரி: ஜெகதேவி பாலமுருகன் கோவில் ஆடிக்கிருத்திகை விழா, நாளை (ஜூலை., 25ல்) கொடி ஏற்றத்துடன் துவங்க உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம் ஜெகதேவி பாலவிநாயகர் கோவிலில், 74ம் ஆண்டு ஆடிக்கிருத்திகை விழா, நாளை (ஜூலை., 25ல்) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி காலை, 4:30 மணிக்கு, 32 படிகளுக்கு படிபூஜை, கணபதி பூஜை, பஜனை செய்து கொடி ஏற்றப்படுகிறது. 10:30 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம், மங்களார்த்தி நடக்கிறது. இரவு, 7:00 மணிக்கு, யாகசாலை பிரவேசம் நடக்கிறது.
வரும், 26ல் ஆடிக்கிருத்தியை முன்னிட்டு, காலை யாகசாலை பூஜை, நவகிரக ஹோமம், பாலமுருகனுக்கு பாலாபிஷேகம், அலங்கார பூஜைகளும், ஆராதனைகளும் நடக்க உள்ளது. 1:30 மணிக்கு மேல், புஷ்பகாவடி, மயில்காவடியுடன் அலகு குத்திக்கொண்டு சடல் தேர், கல் உரல், இரும்புச் சங்கிலி, டிராக்டர் இழுத்து பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற உள்ளனர்.
மாலை, 4:35 மணிக்கு, பக்தர்களின் மார்பின் மீது குந்தானி வைத்து, உலக்கையால் மஞ்சளை இடித்து பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்ற உள்ளனர்.