பதிவு செய்த நாள்
24
ஜூலை
2019
02:07
திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில், வரும், 26ம் தேதி, ஆடிக் கிருத்திகை விழா நடக்கவிருப்பதால், சாலையோரம் காவடிகள் விற்பனை மற்றும் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
திருத்தணி முருகன் கோவிலில், நாளை 25ம் தேதிமுதல், இம்மாதம், 28ம் தேதி வரை, ஆடிக் கிருத்திகை விழா மற்றும் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. இந்த விழாவில், லட்சக்கணக் கான பக்தர்கள் காவடிகளுடன் வந்து முருகப் பெருமானை தரிசிப்பர்.
இந்த நிலையில், தற்போது, திருத்தணி, பெரியார் நகர் பகுதியில், 20க்கும் மேற்பட்ட குடும்பத் தினர் காவடி கூடைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதவிர, சிலர், காவடி மற்றும் கூடைகளை தயார் செய்து சாலையோரம் கடை வைத்து விற்பனை செய்கின்றனர்.
ஆடிக்கிருத்திகை விழா துவங்குவதற்கு இரு நாட்களே உள்ளதால், பக்தர்கள் காவடிகள் தயாரிக்கும் பணியில் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர்.இது குறித்து, திருத்தணி பகுதியைச் சேர்ந்த காவடி வியாபாரி சங்கர் கூறியதாவது:முருகன் கோவிலில், ஆடிக்கிருத்திகை விழா வின் போது, அதிகளவில் பக்தர்கள் காவடிகள் எடுப்பர். இதற்காக, புதிய காவடிகள் தயார் செய்து விற்பனை செய்கிறேன்.
ஒரு காவடிக்கு தேவையான, கட்டை, மணி, கூடைகள் போன்றவை தயார் செய்து, அதிகபட்ச மாக, 700 ரூபாய் வரை விற்கிறேன். ஒரு காவடிக்கு, குறைந்தபட்சம் 50 - 75 ரூபாய் வரை லாபம் கிடைக்கும். ஆடிக்கிருத்திகை குறைந்த நாட்களே இருப்பதால், சாலையோரம் வைத்து விற்பனை செய்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.