பதிவு செய்த நாள்
25
ஜூலை
2019
12:07
ஈரோடு: ஈரோடு, ராஜா கருப்பண்ணசாமி கோவில் ஆடி திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஈரோடு, சூரம்பட்டி நால்ரோடு ராஜாகாடு பகுதியில் உள்ள ராஜா கருப்பண்ணசாமி கோவிலில், ஆண்டுதோறும் ஆடி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப் பட்டு வருகிறது.
அதன்படி இந்தாண்டு திருவிழா கடந்த, 23ல் சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. மாலை, 4:00 மணி க்கு பவானி எலவமலையில் உள்ள பவானி ஆற்றில், தீர்த்தம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று (ஜூலை., 24ல்) காலை, 9:00 மணிக்கு பொங்கல் வைத்தல், தொடர்ந்து பவானி தீர்த்த மஹா அபிஷேகம் நடந்தது. அதன் பின், ராஜா கருப்பண்ணசாமி வெள்ளை குதிரை அலங்காரத்தில் காட்சியளித்தார். சூரம்பட்டி நால் ரோடு, சிதம்பரம் காலனி, பெரியார் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கருப்பண்ண சுவாமியை வழிபட்டனர்.