மதுரை : சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அனைத்து வியாபாரிகள் நலச்சங்கம் தலைவர் சுந்தரமூர்த்தி. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை விழாவின்போது, 40 தற்காலிக கடைகள் நடத்த ஏல அடிப்படையில் வாடகைக்கு விடப்படும்.
பக்தர்களுக்கு பூஜை பொருட்கள் விற்பனை செய்யப்படும். ஏல அறிவிப்பு ஜூன் 10 ல் வெளி யானது. இதில் விதிமீறல் உள்ளது. ஏல அறிவிப்பை ரத்து செய்து, புதிதாக ஏலம் நடத்த உத்தர விட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி அனிதா சுமந்த்: ஏற்கனவே 5 பேருக்கு கடைகள் ஏலத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. அதே நிபந்தனை அடிப்படையில் 35 பேருக்கு ஆடி அமாவாசை விழாவையொட்டி கடைகள் நடத்த ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆக.,3 ல் கடைகளை காலி செய்ய வேண்டும் என்றார்.