மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் மைக்கண் மாரியம்மன் கோவிலில், நடைபெறும் மண்டல பூஜையில் மணப்பெண் அலங்காரத்தில், அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மேட்டுப்பாளையம் பழைய சந்தைக் கடையில், மிகவும் பழமையான மைக்கண் மாரியம்மன் கோவில் உள்ளது. இக் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த, 15 ஆம் தேதி நடந்தது. இதையடுத்து மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு நாளும், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, அபிஷேக பூஜை செய்து வருகின்றனர். விழாவின், 9-வது நாளில் அம்மனுக்கு மணப்பெண் அலங்காரம் செய்யப்பட்டது. அதை எடுத்து நடந்த அபிஷேக பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.