காளையார்கோவில்: காளையார்கோவில் சொர்ணவள்ளி அம்பாள் ஆலய ஆடிப்பூர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
சொர்ணகாளீஸ்வரர் கோயிலில் உள்ள சொர்ணவள்ளி அம்பாள் சன்னதியில் ஆடிப்பூர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. நேற்று இரவு 7:00 மணிக்கு அம்பாள் திருவீதி உலா வந்தார். ஆக., 6ம் தேதி வரை தினமும் இரவு 7:00 மணிக்கு அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருவார். ஆடிப்பூர விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். கோயில் கண்காணிப்பாளர் சரவண கணேசன் விழா ஏற்பாடுகளை செய்திருந்தார். கோயில் ஸ்தானிகம் காளீஸ்வர குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் பூஜைகளை செய்திருந்தனர்.