கடலுார் கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில், 10 நாள் ஆடி மாத உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
கடலுார் பாடலீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள பராசக்தி அம்மன் சன்னதியில், ஆடி மாத பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு, 10 நாள் உற்சவம் நேற்று காலை 8:00 மணிக்கு கொடியேற்றத் துடன் துவங்கியது.தொடர்ந்து, சுவாமி மாட வீதியுலா நடந்தது. தினமும் காலை, மாலை சிறப்பு அபிஷேகம், வீதியுலா நடக்கிறது. 10ம் நாள் உற்சவமான வரும் ஆக., 3ம் தேதி காலை 8:00 மணி க்கு பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. பராசக்தி அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை முடிந்து கொலு மண்டபத்தில் திருக்கல்யாணமும், வளைகாப்பு நிகழ்ச்சியும் நடக்கிறது.