நெல்லிக்குப்பம் நடனபாதேஸ்வரர் கோவிலில், தேய்பிறை அஷ்டமி பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூலை 2019 02:07
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவிலில், ஆனந்த காலபைரவருக்கு தனி சன்னதி உள்ளது.
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, சிறப்பு யாகமும் காலபைரவருக்கு 108 சங்காபிஷேகமும், பால் தயிர் உட்பட 18 பொருட்களால் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். உற்சவர் வீதி உலா வந்து அருள்பாலித்தார். பூஜை களை சேனாபதி குருக்கள் செய்தார். கைலாசநாதர் கோவிலிலும் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது.