காஞ்சிபுரம்: ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது.பெரிய காஞ்சிபுரம் குளக்கரை மாரியம்மன் கோவிலில், 108 விளக்கு பூஜை நடந்தது. அம்மன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.காஞ்சி காமாட்சியம்மன் மற்றும் ஆதிபீட பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, அம்மனை தரிசனம் செய்தனர்.