பதிவு செய்த நாள்
29
ஜூலை
2019
02:07
காஞ்சிபுரம் : ஆடி மாத, இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையான நேற்று, காஞ்சிபுரத்தின் பல கோவில்களில், ஆடித்திருவிழா நடந்தது. பெரிய காஞ்சிபுரம் சாலைத்தெரு குளக்கரை மாரியம்மன் கோவிலில், ஆடித் திருவிழாவை யொட்டி, நேற்று காலை, 7:00 மணிக்கு, சர்வதீர்த்த குளக்கரையில் இருந்து ஜலம் திரட்டி வந்தனர்.மதியம், 11:00 மணிக்கு கூழ் வார்த்தல்; மாலை, 3:00 மணிக்கு, பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபட்டனர்.பெரிய காஞ்சிபுரம், பாண்டவ துாத பெருமாள் கோவில் சன்னிதி தெரு பொய்யாமுடி விநாயகர் கோவிலில், அம்மனுக்கு கூழ் வார்த்தலும், அன்னதானமும் நடந்தது. மதியம், 2:00 மணிக்கு ஊரணி பொங்கல் எடுத்து, சந்தவெளி அம்மன் கோவிலில் பொங்கலிட்டனர். இரவு, அம்மன் வீதியுலா நடந்தது.பெரிய காஞ்சிபுரம் சந்தவெளியம்மன் கோவிலில், நுாற்றுக் கணக்கான பக்தர்கள், அம்மனுக்கு பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபட்டனர்.நேர்த்திக்கடனாக, பக்தர்கள் பலர், வேப்பஞ்சேலை செலுத்தினர்.