அகத்தியரின் சீடரான உரோமச முனிவர் வழிபட்ட சிவத்தலம் துாத்துக்குடி மாவட்டத்திலுள்ள ராஜபதி. நவ கைலாயத் தலங்களில் ஒன்று. இங்கு சுவாமியை கைலாசநாதர் என்றும், அம்மனை சிவகாமி என்றும் அழைக்கின்றனர். கிரகங்களில் கேதுவுக்கு உரியதான இது ’தென் காளஹஸ்தி’ எனப்படுகிறது. இங்குள்ள நவக்கிரக சன்னதியில் பக்தர்களே அபிஷேகம் செய்து வழிபடலாம். கால சர்ப்ப தோஷம், திருமணத்தடை, பிதுர் தோஷம் போக்க வாரந்தோறும் ஞாயிறு பகல் 12:00 – 1:30 மணி, செவ்வாயன்று காலை 9:00 – 10:30 மணி வரை பரிகார பூஜை நடக்கிறது. ௨௦௧௯, ஜூன் 14 கும்பாபிஷேகம் நடந்தது. திருச்செந்தூர் – தூத்துக்குடி சாலையில் உள்ளது குரும்பூர். அங்கிருந்து ஏரல் செல்லும் வழியில் ராஜபதி 4 கி.மீ., தொடர்புக்கு: 97873 82258