பதிவு செய்த நாள்
28
நவ
2025
04:11
கோவா: இந்தியாவின் மிக உயரமான ஸ்ரீராமரின் வெண்கல சிலையை கோவாவின் ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பரதகாலி ஜீவோட்டம் மடத்தில் இன்று (நவ.,28) பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
கோவாவின் கனகோனாவில் (தெற்கு கோவா) உள்ள ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பரதகலி ஜீவோட்டம் மடத்தில் நிறுவப்பட்ட ஸ்ரீ ராமரின் 77 அடி வெண்கல சிலை, இன்று புனித பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதற்கான பிராண பிரதிஷ்டை பூஜைகள் ஸ்ரீமத் வித்யாதீஷ் தீர்த்த சுவாமியால் சிறப்பாக நடைபெற்று வந்தது. பிரதமர் மோடி விழாவில் கலந்து கொண்டு, இந்தியாவின் மிக உயரமான ஸ்ரீராமர் வெண்கல சிலையை திறந்து வைத்து சிறப்புறையாற்றினார்.
பிரதமர் வருகை: இன்று நவம்பர் 28ம் தேதி பிரதமர் மோடி கர்நாடகா, உடுப்பிக்கு வருகை தந்தார். பிரதமரை வழியேங்கும் மக்கள் மலர் தூவி வரவேற்றனர். தொடர்ந்து, காலை 11:30 மணியளவில், பிரதமர் கர்நாடகாவின் உடுப்பியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண மடத்திற்கு வருகை தந்தார். மடத்தின் சார்பாக பிரதமருக்கு பூரணகும்ப மாரியாதை அளிக்கப்பட்டது. ஸ்ரீபுட்டிகே மடத்தின் தலைவர் ஸ்ரீசுகுணேந்திரதீர்த்த சுவாமியை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் சுவாமி தரிசனம் செய்த பிரதமர், மடத்தில் லட்ச காந்த கீதை பாராயண நிகழ்ச்சியில் பங்கேற்றார். இது பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்கள், துறவிகள், அறிஞர்கள் மற்றும் குடிமக்கள் உட்பட 100,000 பேர் கூட்டாக சேர்ந்து ஸ்ரீமத் பகவத் கீதையை ஒருமனதாக பாரயணம் செய்தனர். இதில் பிரதமர் பங்கேற்று லட்சகண்ட கீதா பாராயணம் செய்தார்.
550 வது ஆண்டு விழா; கோகர்ண பரதகாலி மடத்தின் 550 வது ஆண்டு விழாவை முன்னிட்டு கோவா வந்தார் பிரதமர் மோடி. பிரதமருக்கு, சிவப்பு பூரணகும்ப மாரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ன் பரதகாளி ஜீவோத்தம மடத்தில் தரிசனம் பிரதமர் தரிசனம் செய்தார். அங்கு நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் கலந்து கொண்ட பிரதமருக்கு வேத மந்திரம் முழங்க ஆச்சார்யார்கள் ஆசிர்வாதம் செய்தனர். பிற்பகல் 3.30 மணிக்கு இந்தியாவின் மிக உயரமான வெண்கலத்தால் ஆன 77 அடி பிரபு ஸ்ரீ ராமரின் சிலையை பிரதமர் திறந்து வைத்தார். நொய்டாவைச் சேர்ந்த புகழ்பெற்ற சிற்பி ராம் சுதாரின் வழிகாட்டுதலின் கீழ் இந்த ராமர் சிலை வடிவமைக்கப்பட்ட குறிபிடத்தக்கது. மேலும் மடத்தால் உருவாக்கப்பட்ட ராமாயண தீம் பார்க் கார்டனையும் திறந்து வைக்தார். சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நினைவு நாணயத்தையும் வெளியிட்டு பிரதமர் சிறப்புரையாற்றினார். விழாவை முன்னிட்டு பத்ரிநாத்திலிருந்து கோவா வரை ஒரு பிரமாண்டமான ஸ்ரீ ராம யாத்திரை நடைபெற்றது. விழாவில் சுமார் 1.2 லட்சம் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
மத்வாச்சாரியாரால் நிறுவப்பட்டது; ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பர்தகலி ஜீவோத்தம மடம் முதல் கௌட சரஸ்வத் பிராமண வைணவ மடமாகும். இது கி.பி 13 ஆம் நூற்றாண்டில் ஜகத்குரு மத்வாச்சாரியாரால் நிறுவப்பட்ட த்வைத ஒழுங்கைப் பின்பற்றுகிறது. இந்த மடத்தின் தலைமையகம் தெற்கு கோவாவில் உள்ள குஷாவதி நதிக்கரையில் உள்ள ஒரு சிறிய நகரமான பர்தகலி நகரில் உள்ளது குறிபிடத்தக்கது.