திருவண்ணாமலையில் இன்று கண்ணாடி ரிஷப வாகனத்தில் அருணாசலேசஸ்வரர் உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28நவ 2025 01:11
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் விழாவில் 5ம் நாளானா காலை உற்சவத்தில் கண்ணாடி ரிஷபம் வாகனத்தில் சந்திரசேகரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேசஸ்வரர் கோவிலில் இன்று 5ம் நாள் தீப திருவிழாவையொட்டி, அதிகாலை, 3:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. தொடர்ந்து காலையில் ராஜகோபுரம் முன் ரிஷப வாகனத்தில் விநாயகர், கண்ணாடி ரிஷபம் வாகனத்தில் சந்திரசேகரர் (உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார்) சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். உலா வரும் சுவாமிகளுக்கு தினமும் 500 கிலோ க்கு மேல் வண்ண பூக்களை பயன்படுத்தி ஊழியர்கள்.அலங்காரம் மாலைகள் செய்து வருகின்றனர்.