குழந்தைகள் எங்கு மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ, அங்கே ஆண்டவர் இருக்கிறார். நாமும் குழந்தைகளை நேசிக்க வேண்டும். அவர்களுக்கு நல்ல கதைகளை நகைச்சுவையோடு சொல்லிக் கொடுக்கும் போது, அவர்கள் மகிழ்வார்கள். அந்த சிரிப்பால் மகிழும் ஆண்டவர் நம் வீட்டில் வந்து தங்குவார். குழந்தைகளுக்கு நோய் வராமல் பார்த்துக் கொள்வார். அவர்களை அணைத்துக் கொண்டு, அவர்கள் மீது கைவைத்து ஆசிர்வதிப்பார். குழந்தைகள் சேட்டை செய்தாலும் அன்பாகப் பேசி திருத்த முயலுங்கள்.