குடும்பத்துக்காக உழைத்து ஓய்வு பெற்ற போதும் மனிதனுக்கு நிம்மதி இருப்பதில்லை. ”என்னத்த உழைச்சு கிழித்தீர்கள்! கார் உண்டா, பங்களா உண்டா?” என்கிறார்கள் குடும்பத்தினர். “உன் சேமிப்பில் கொஞ்சம் கடன் கொடுப்பாயா” என்கிறார்கள் உறவினர்கள். “இன்று முதல் உங்களை நாங்கள் கவனித்துக் கொள்கிறோம்” என்று ஓய்வு பெற்றவரிடம் குடும்ப உறுப்பினர் ஒருவர் சொன்னாலும் அவர் தான் உலகில் சிறந்த பாக்கியவான். அந்த பாக்கியம் இன்று எத்தனை பேருக்கு கிடைக்கிறது? “ஆண்டவருக்காக உழைப்பது வீண் போகாது என்பதை அறிந்து, ஆண்டவரின் பணியை இன்னும் அதிகமாக செய்யுங்கள்” என்ற வசனத்தை சிந்தியுங்கள்.