பதிவு செய்த நாள்
01
ஆக
2019
03:08
சேலம்: ஆடி அமாவாசையையொட்டி, சேலம் மாவட்டத்திலுள்ள அம்மன் கோவில்களில், நேற்று (ஜூலை., 31ல்), சிறப்பு பூஜை நடந்தது. அதில், ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
சேலம், பொன்னம்மாபேட்டை, மன்னார்பாளையம் பிரிவு, பிரித்யங்கிரா தேவி கோவிலில், நேற்று காலை, 11:00 மணிக்கு, உலக நன்மை வேண்டி, பக்தர்கள் காணிக்கையாக கொண்டு வந்த, 500 கிலோ வரமிளகாய் மூலம், ’சத்ரு சம்ஹார’ சிறப்பு யாகம் நடந்தது. அதில் வைத்து பூஜித்த கலசத்திலிருந்து, புனிதநீரால், தேவிக்கு அபிஷேகம் செய்து, சந்தன காப்பு அலங் காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. அஸ்தம்பட்டி மாரியம்மன், தங்க கிரீட அலங்காரம்; வின்சென்ட் எல்லைப்பிடாரி அம்மன் தங்க கவசத்தில் காட்சியளித்தார்.
கோட்டை மாரியம்மனுக்கு, பால் அபிஷேகம் நடந்தது. அதேபோல், சேலம் மாநகரிலுள்ள, பல்வேறு கோவில்களில், பூஜை, அபிஷேகம் நடந்தது. மேச்சேரி பத்ரகாளியம்மன் நவ துர்க்கை அலங்காரம்; ஆட்டையாம்பட்டி காளியம்மன், சிறப்பு அலங்காரம்; ஆத்தூர், கொத்தாம்பாடி, முனீஸ்வரன், புஷ்ப அலங்காரம்; ஆத்தூர், கோட்டை சம்போடை வனம் மதுரகாளியம்மன், வேம்படிதாளம் மாரியம்மன் சுவாமிகள், வெள்ளி கவச அலங்காரத்தில் காட்சியளித்தனர்.